டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு தகுதி + "||" + Wimbledon tennis: Djokovic, Ashley qualify for party quarterfinals

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு தகுதி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 20-ம் நிலை வீரரான கிறிஸ்டியன் காரினை (சிலி) சந்தித்தார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்து 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.


மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 3-6, 6-4, 6-4, 0-6, 3-6 என்ற செட் கணக்கில் 48-ம் நிலை வீரரான ஹங்கேரியின் மார்டோன் புகோவிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

பெரேட்டினி வெற்றி

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி 6-4, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் பெலாரஸ் வீரர் இவாஷ்காவை விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவ், ரஷிய வீரர் கரென் கச்சனோவ் ஆகியோர் வெற்றியை ருசித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் கால் பதித்தனர்.

ஆஷ்லி பார்ட்டி அசத்தல்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் மங்கையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 7-5, 6-3 என்ற நேர்செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான பார்போரா கிராஜ்சிகோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 65-ம் நிலை வீராங்கனையான சாம்சோனாவாவை (ரஷியா) எளிதில் தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்குள் கால் பதித்தார்.

சபலென்கா வெற்றி

இன்னொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் எலினா ரைபகினாவை சாய்த்து கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் கரோலினா முச்சோவா (செக் குடியரசு), ஒன்ஸ் ஜாபிர் (துனிசியா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு தகுதி கண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து செக் குடியரசின் கரோலின் முச்சோவா விலகுவதாக அறிவித்துள்ளார்.
2. பிரிட்டிஷ் விளையாட்டு விருதுகள்: இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக எம்மா ராடுகானு தேர்வு
19 வயதான ராடுகானு, அமெரிக்க ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் டென்னிஸ் உலகையே திகைக்க வைத்தார்.
3. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலியை வீழ்த்தியது குரேஷியா
குரேஷிய அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் செர்பியா அல்லது கசகஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
4. ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: பட்டம் வென்றார் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்...!
ஏடிபி சேலஞ்சர் இறுதிப் போட்டிகளில் முதல்முறையாக ஒற்றையர் பட்டத்தை ராம்குமார் ராமநாதன் வென்றுள்ளார்
5. காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... சீனாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை!
சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.