டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி + "||" + Roger Federer surprise Wimbledon defeat raises fresh retirement questions

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் மார்டோன் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 10-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதே போல் டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) 6-4, 3-6, 5-7, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் கரென் கச்சனோவை (ரஷியா) விரட்டி கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார். ஷபோவலோவ் அடுத்து ஜோகோவிச்சுடன் மோத உள்ளார். மற்றொரு கால்இறதியில் 8 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3-6, 6-7 (4-7), 0-6 என்ற நேர் செட் கணக்கில் ஹர்காக்சிடம் (போலந்து) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.


கலப்பு இரட்டையர் பிரிவின் 3-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி 3-6, 6-3, 9-11 என்ற செட் கணக்கில் ஆந்த்ரேஜா கிலெபக் (சுலோவேனியா)- ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) இணையிடம் போராடி வீழ்ந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் டென்னிஸ்: கோப்பையை வென்ற இந்திய வம்சாவளி வீரர் சமிர் பானர்ஜீ
விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ கைப்பற்றினார்.
2. விம்பிள்டன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்
இந்த வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் , நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
3. விம்பிள்டன் டென்னிஸ் : ஆஷ்லே பார்டி சாம்பியன்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
4. விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீரர் பெரேட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
5. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார்.