டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா + "||" + Wimbledon 2021: Ash Barty to face Karolina Pliskova in her first final in London

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார்.
2-வது செட்டில் 2-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த ஆஷ்லி பார்ட்டி அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு டைபிரேக்கர் வரை போராடி வெற்றியை தன்வசப்படுத்தினார். ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் விம்பிள்டனில் இறுதிசுற்றை எட்டுவது 1980-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 13-வது இடம் வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீராங்கனை சபலென்காவை (பெலாரஸ்) போராடி விரட்டி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடக்கும் மகுடத்துக்கான ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி-பிளிஸ்கோவா மோதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள்
சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் முன்னேறியுள்ளன
2. டி20 இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? பென் ஸ்டோக்ஸ் கணிப்பு!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதப்போகும் இரண்டு அணிகளை பென் ஸ்டோக்ஸ் கணித்துள்ளார்.
3. தெற்காசிய கால்பந்து இறுதிப்போட்டி: இந்தியா-நேபாளம் இன்று மோதல்
தெற்காசிய கால்பந்து போட்டியில் 8-வது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று நேபாளத்தை சந்திக்கிறது.
4. 4-வது முறையாக கோப்பையை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4-வது முறையாக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் சென்னை அணி நாளை இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்த்து களம் காணுகிறது.