டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் : ஆஷ்லே பார்டி சாம்பியன் + "||" + Ashleigh Barty Beats Karolina Pliskova To Win Maiden Wimbledon Crown

விம்பிள்டன் டென்னிஸ் : ஆஷ்லே பார்டி சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் : ஆஷ்லே பார்டி சாம்பியன்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டன்,

இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில்  உலகின் 'நம்பர்-1' ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி  - செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினர். மிகவும் பரபரப்பாக இந்த ஆட்டம் நடைபெற்றது. 

ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள்  நீடித்த இந்தப்  போட்டியில் ஆஷ்லே பார்டி 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, விம்பிள்டனில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.  ஆஷ்லே பார்டி வெல்லும் 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.  ஏற்கனவே 2019-ல் பிரெஞ்ச் ஓபனில் கோப்பை ஆஷ்லே பார்டி வென்றிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக்: நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி அதிர்ச்சி தோல்வி
மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து ஆஷ்லே பார்டி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
2. விம்பிள்டன் டென்னிஸ்: கோப்பையை வென்ற இந்திய வம்சாவளி வீரர் சமிர் பானர்ஜீ
விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ கைப்பற்றினார்.
3. விம்பிள்டன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்
இந்த வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் , நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
4. விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீரர் பெரேட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
5. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார்.