டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன் + "||" + Novak Djokovic wins 20th Grand Slam title at Wimbledon, downs Matteo Berrettini in 4 sets for historic crown

விம்பிள்டன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ்; ஜோகோவிச் சாம்பியன்
இந்த வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் , நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான ஜோகோவிச்சும் 7-ஆம் நிலை வீரரும் இத்தாலியை சேர்ந்தவருமான பெர்ரெட்னியும் பலப்பரிட்சை நடத்தினர்.  

மூன்று மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், இத்தாலியின் பெர்ரெட்னியை 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம்  20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் , நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடர்ந்து விம்பிள்டன்னிலும் ஜோகோவிச் வாகை சூடியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் டென்னிஸ்: கோப்பையை வென்ற இந்திய வம்சாவளி வீரர் சமிர் பானர்ஜீ
விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ கைப்பற்றினார்.
2. விம்பிள்டன் டென்னிஸ் : ஆஷ்லே பார்டி சாம்பியன்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
3. விம்பிள்டன் டென்னிஸ்: இத்தாலி வீரர் பெரேட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
4. விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டி- பிளிஸ்கோவா
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டினார்.
5. விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர் அதிர்ச்சி தோல்வி
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் மார்டோன் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 10-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.