விம்பிள்டன் டென்னிஸ்: கோப்பையை வென்ற இந்திய வம்சாவளி வீரர் சமிர் பானர்ஜீ


விம்பிள்டன் டென்னிஸ்: கோப்பையை வென்ற இந்திய வம்சாவளி வீரர் சமிர் பானர்ஜீ
x
தினத்தந்தி 12 July 2021 12:30 AM GMT (Updated: 2021-07-12T06:00:06+05:30)

விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ கைப்பற்றினார்.

விம்பிள்டன் டென்னிஸ் சிறுவர் பிரிவின் ஒற்றையர் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த சமிர் பானர்ஜீ நேற்று கைப்பற்றினார். 

ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த இந்த இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சமிர் பானர்ஜீ 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான விக்டர் லிலோவை வீழ்த்தி கோப்பையை வென்றார். 17 வயதான சமிர் பானர்ஜீ இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.Next Story