டென்னிஸ்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல் + "||" + Bianca Andreescu will not compete in Tokyo Olympics due to pandemic

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகல்
கொரோனா அச்சுருத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி தொடங்குகிறது. டோக்கியோவில் நடக்கும் இந்த ஒலிம்பிக்கிற்காக உலகம் முழுதும் உள்ள தடகள வீரர்கள் தீவிரமாக தயாராகிவருகின்றனர். இதனிடையே பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் மற்றும் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காதது “மிகவும் கடினமான” முடிவு. நான் சிறுமியாக இருந்தபோதே ஒலிம்பிக்கில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என் கனவாக இருந்தது. ஆனால் தொற்றுநோயுடன் தொடர்புடைய அனைத்து சவால்கலும்,  என் இதயத்தில் ஆழமாக இருப்பதை நான் அறிவேன், இது எனக்கு நானே எடுக்கும் சரியான முடிவு. எதிர்கால ஃபெட் கோப்பை போட்டிகளில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தவும், பாரிஸில் நடைபெறும் 2024 ஒலிம்பிக்கில் போட்டியிடுவதையும் நான் எதிர்நோக்கி உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். 
தொடர்புடைய செய்திகள்

1. ரூ.6 கோடி - ரூ. 25 லட்சம்: ஒலிம்பிக் பதக்கத்தின் மதிப்பு இந்தியாவில் பதக்கம் வெல்பவரின் மாநிலத்தை பொறுத்தது
ரூ. 6 கோடி முதல் ரூ.25 ரூ. 6 கோடி முதல் ரூ25 வரை வரை ஒலிம்பிக் பதக்கத்தின் பண மதிப்பு என்பது இந்தியாவில் பதக்கம் வென்றவர் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார் என்பதைப் பொறுத்தது.
2. ஒலிம்பிக் போட்டி: ஜூலை 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படுகிறது இந்திய குழு
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் முதல் குழு 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படுகிறது.
3. டோக்கியோ ஒலிம்பிக் இந்திய வீரர்களுடன் ஜூலை 13ம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாடல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன் ஜூலை 13ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.
4. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி கலந்துரையாடுகிறார்.
5. டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி பதக்க வாய்ப்பு: முழு விவரம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஹாக்கி போட்டி 2021 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 6 வரை ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஓய் கடலோர பூங்காவில் நடைபெற உள்ளது.