உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி


உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஜோகோவிச் தகுதி
x
தினத்தந்தி 12 July 2021 11:26 PM GMT (Updated: 2021-07-13T04:56:28+05:30)

இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

துரின், 

லண்டனில் நேற்று முன்தினம் நடந்த கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-7 (4-7), 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 9-வது இடம் வகித்த இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 34 வயதான ஜோகோவிச் ஒட்டுமொத்தத்தில் வென்ற 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் (20 கிராண்ட்ஸ்லாம்) பட்டம் வென்றவர்களான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். அத்துடன் ‘டாப்-8’ வீரர்கள் மட்டும் பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முதல் வீரராக தகுதி பெற்றுள்ளார். இந்த ஆண்டில் இதுவரை நடந்துள்ள 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு 14-வது முறையாக தகுதி கண்டு இருக்கிறார். இந்த போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நவம்பர் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது.

அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்சுக்கு, பெடரர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story