டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்


டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்
x
தினத்தந்தி 13 July 2021 4:55 PM GMT (Updated: 2021-07-13T23:07:25+05:30)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித்தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது.


சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவது இல்லை என அறிவித்துள்ளார்.

 முழங்கால் காயத்தால் ஏற்பட்ட பின்னைடைவு காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் விலகியதாக தெரிகிறது.  

 ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவது தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் பெடரர் தெரிவித்துள்ளார்.  ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story