டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ஏஞ்சலிக் கெர்பர், அஸரென்கா விலகல்


டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ஏஞ்சலிக் கெர்பர், அஸரென்கா விலகல்
x
தினத்தந்தி 16 July 2021 12:10 AM GMT (Updated: 16 July 2021 12:10 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ஏஞ்சலிக் கெர்பர், அஸரென்கா விலகியுள்ளனர்.

பெர்லின், 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் விலகி இருக்கிறார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான 33 வயது ஏஞ்சலிக் கெர்பர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருவதால் உடல் சோர்வடைந்து இருப்பதாகவும், அதில் இருந்து மீண்டு வர ஓய்வு தேவைப்படுவதால் இந்த கடினமான முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதேபோல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான விக்டோரியா அஸரென்காவும் (பெலாரஸ்) ஒதுங்கி இருக்கிறார். ஏற்கனவே பெடரர், ரபெல் நடால், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலெப், பியான்கா உள்ளிட்டோர் இந்த போட்டியில் இருந்து பின்வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story