டென்னிஸ்

ஒலிம்பிக் தொடர்: டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி + "||" + Novak Dkokovic Makes Winnig Start at tokyo olypics

ஒலிம்பிக் தொடர்: டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி

ஒலிம்பிக் தொடர்: டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி
நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
டோக்கியோ, 

ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. 

119 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கியிருக்கும் இந்தியா தனது முதல் பதக்கத்தை உறுதி செய்தது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பொலிவிய வீரர் டெலியனை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் பட்டங்களை தொடர்ச்சியாக வென்று இருக்கும் ஜோகோவிச் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுடன் அடுத்து வரும் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றால், ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். இந்த அரிய சாதனையை ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப் (1988-ம் ஆண்டு) மட்டுமே நிகழ்த்தி உள்ளார்.

முன்னதாக கட்டுப்பாடுகள், காயம் உள்ளிட்ட பிரச்சினை காரணமாக முன்னணி டென்னிஸ் வீரர்கள் ரோஜர் பெடரர், ரபெல் நடால், டொமினிக் திம், வாவ்ரிங்கா, வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலெப், பியான்கா, ஏஞ்சலிக் கெர்பர், விக்டோரியா அஸரென்கா உள்பட பலர் இந்த போட்டியில் இருந்து விலகி விட்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இளம் வீராங்கனைகளான லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு மோதுகிறார்கள்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், சபலென்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி.
5. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர்- ரூப்லெவ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.