டென்னிஸ்

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி: தமிழக வீரர் சத்யன் போராடி தோல்வி + "||" + Tokyo Olympics Table Tennis: Sathiyan Gnanasekaran loses to Lam Siu Hang in round of 32

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி: தமிழக வீரர் சத்யன் போராடி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி:  தமிழக வீரர் சத்யன் போராடி தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் 3-4 என்ற கேம் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ஒலிம்பிக் இரண்டாவது சுற்றில் ஹாங்காங்கைச் சேர்ந்த லாம் ஸியு ஹாங்கை இன்று எதிர்கொண்டார்.

இதில் முதல் தொடரில்  7-11 என்ற கணக்கில் சத்யன் இழந்தார். எனினும் இரண்டாவது தொடரில் 11-7 என்ற கணக்கில் சத்யன் வென்றார். இதே ஆதிக்கத்தை அடுத்தடுத்த தொடரிலும் தொடர்ந்த சத்யன் 3-வது மற்றும் 4-வது தொடரில் முறையே 11-4, 11-5 என்ற கணக்கில் வென்று ஆதிக்கம் செலுத்தினார்.

ஆனால், 5-வது தொடரில் எழுச்சி கண்ட ஹாங்காங் வீரர் 11-9 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றினார். அடுத்து தொடரில் சத்யன் கடுமையான போட்டியைத் வழங்கியும் 10-12 என்ற கணக்கில் தொடரை இழந்தார். கடைசி  தொடரையும் சியு ஹாங்கே 11-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதன்மூலம், 1 மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கேம் கணக்கில் ஹாங்காங் வீரர் வெற்றி பெற்றுள்ளார்.