டென்னிஸ்

டோக்கியோ ஒலிம்பிக்: மணிகா பாத்ரா தோல்வி + "||" + Manika Batra outplayed by Sofia Polcanova in 3rd Round of Women's TT Singles

டோக்கியோ ஒலிம்பிக்: மணிகா பாத்ரா தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்:  மணிகா பாத்ரா தோல்வி
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிகா பாத்ரா தோல்வி அடைந்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் மணிகா பாத்ரா. இவர் பதக்கம் வெல்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒற்றையர் பிரவில் ஆஸ்திரியாவின் சோபியா போல்கனோவாவிடம் நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரவின் மூன்றாவது சுற்றில், 11-8 11-2 11-5 11-7 என்ற செட் கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளார். இந்த போட்டியில் வெற்றிபெற்றிருந்தால் ரவுண்ட் ஆஃப் 16க்கு பாத்ரா தகுதி பெற்றிருப்பார். ஆனால், 27 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் முழுக்க முழுக்க சோபியாவே ஆதிக்கம் செலுத்தினார். இதன்மூலம், இந்தியாவின் பதக்கக் கனவு பறிபோகி உள்ளது.