டென்னிஸ்

கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’ + "||" + Canada International Tennis: Camila, Medvedev 'Champion'

கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’

கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’
கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’.
மான்ட்ரியல்,

கனடாவின் மான்ட்ரியல் நகரில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் உலக தரவரிசையில் 71-வது இடம் வகிக்கும் கமிலா ஜியார்ஜி (இத்தாலி) 6-3, 7-5 என்ற நேர் செட்டில் 6-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுக்கு (செக்குடியரசு) அதிர்ச்சி அளித்து கோப்பையை தட்டிச் சென்றார். அவருக்கு இது 3-வது பட்டமாகும். ரூ.1½ கோடி பரிசுத்தொகையும் பெற்றார்.


கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த ஆண்களுக்கான மாஸ்டர்ஸ் டென்னிசின் இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் ரீலி ஒபெல்காவை வீழ்த்தி வாகை சூடினார். இந்த பட்டத்தை ரஷிய வீரர் ஒருவர் வெல்வது 2000-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். 25 வயதான மெட்விடேவுக்கு இது 12-வது சர்வதேச கோப்பையாகும். வெற்றி பெற்ற அவருக்கு ரூ.2¾ கோடி பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசை பட்டியலில் மெட்விடேவ் மாற்றமின்றி 2-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ‘நம்பர் ஒன்’ இடத்திலும் நீடிக்கிறார்கள். ஜோகோவிச் மொத்தம் 334 வாரங்கள் ‘நம்பர் ஒன்’ இடத்தை ஆக்கிரமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இளம் வீராங்கனைகளான லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு மோதுகிறார்கள்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், சபலென்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி.
5. நடிகை மகிமாவுக்கு சர்வதேச விருது
ஆர்யா நடித்து 2019-ல் வெளியான படம் மகாமுனி. இதில் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.