டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடப் போவது இல்லை என ரபேல் நடால் அறிவிப்பு + "||" + Rafael Nadal Out for Rest of 2021 Tennis Season with Foot Injury

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடப் போவது இல்லை என ரபேல் நடால் அறிவிப்பு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடப் போவது இல்லை என ரபேல் நடால் அறிவிப்பு
முன்னணி வீரர்களான ரபேல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியிருப்பது டென்னிஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில்  இருந்து முன்னணி டென்னிஸ் வீரர் ரபேல் நடால் விலகுவதாக அறிவித்துள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021-ம் ஷெஷனை  முடித்துக்கொள்வதாக நடால் அறிவித்துள்ளார்.  “காலில் ஏற்பட்ட காயத்தால் ஒரு வருடமாக அவதிப்படுகிறேன். இதற்குத் தீர்வு காண எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது” என ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் அண்மையில் அறிவித்து இருந்த நிலையில், தற்போது ரபேல் நடாலும் அறிவித்துள்ளார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும்  30 ஆம் தேதி தொடங்கி  செப்டம்பர் 12 வரை நடைபெறவுள்ளது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டித்தொடரில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி - 13 பேர் படுகாயம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. அமெரிக்காவில் மோடி: துணை அதிபர் கமலா ஹாரிசுடன் சந்திப்பு
வாஷிங்டனில் துணை அதிபர் கமலா ஹாரிசை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
3. அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.7 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 38.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்ததால் எங்கள் கிரிக்கெட் அழிந்தது - பாகிஸ்தான் மந்திரி பரபரப்பு தகவல்
அமெரிக்கா தனது ராணுவ முகாம்களை இங்கு அமைக்க கேட்டிருந்தது, முடியவே முடியாது என்றோம் அதற்கான விலையை பாகிஸ்தான் கிரிக்கெட் கொடுத்து உள்ளது என பாகிஸ்தான் மந்திரி கூரினார்.
5. அமெரிக்காவுக்குள் நுழையும் ஹைதி அகதிகள் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பு
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் ஹைதி நாட்டின் அகதிகளை சொந்தநாட்டிற்கே அமெரிக்க அரசு அனுப்பி வைக்கிறது.