டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஒசாகா தோல்வி + "||" + Naomi Osaka Makes Shock Exit In Cincinnati Masters, Loses To Jil Teichmann In 3rd Round

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஒசாகா தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஒசாகா தோல்வி
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி கண்டார்.
மெட்விடேவ் முன்னேற்றம்
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 21-ம் நிலை வீரரான டிமிட்ரோவை (பல்கேரியா) விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) சரிவை சமாளித்து 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லோரென்சோ சோனிகோவை வீழ்த்தினார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினாவின் குய்டோ பெல்லாவை தோற்கடித்தார்.மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பெலிக்ஸ் அஜெர் அலியாசிம் (கனடா), பாப்லோ காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), கேஸ்பர் ரூட் (நார்வே), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்) ஆகியோரும் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர்.

ஒசாகா ‘அவுட்’
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சி தோல்வியை தழுவினார். அவரை ‘வைல்டு கார்டு’ மூலம் வாய்ப்பு பெற்ற 76-ம் நிலை வீராங்கனையான ஜில் டீச்மான் (சுவிட்சர்லாந்து) முதல் செட்டை இழந்த நிலையில் சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 4 நிமிடம் நீடித்தது. ஜில் டீச்மான் டென்னிஸ் வாழ்க்கையில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-0, 6-2 என்ற நேர்செட்டில் நடப்பு சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) துவம்சம் செய்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, கிவிடோவா, பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பார்பரோ ஜிரெஜ்சிகோவா, ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பாலா படோசா (ஸ்பெயின்), பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்து கால்இறுதியை எட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர், ஆஷ்லி பார்ட்டி ‘சாம்பியன்’
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
2. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு அலெக்சாண்டர் சுவரேவ் தகுதி
சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் ஆடவர் பிரிவில் சுவரேவ் பெண்களில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்லே பார்டி, ஜில்டெச்மேன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
3. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேறினார்.
4. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஒசாகா, ஆஷ்லி பார்ட்டி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் நவோமி ஒசாகா, ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
5. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அஸரென்கா வெற்றி
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா வெற்றி பெற்றார்.