சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு அலெக்சாண்டர் சுவரேவ் தகுதி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு அலெக்சாண்டர் சுவரேவ் தகுதி
x
தினத்தந்தி 22 Aug 2021 9:09 AM GMT (Updated: 22 Aug 2021 9:09 AM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் ஆடவர் பிரிவில் சுவரேவ் பெண்களில் ஒற்றையர் பிரிவில் ஆஸ்லே பார்டி, ஜில்டெச்மேன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 2-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) - அலெக்சாண்டர் சுவரேவ் மோதினார்கள். இதில் 3-வது வரிசையில் உள்ள சுவரேவ் 6-4, 3-6, 7-6, (7-4) என்ற செட் கணக்கில் சிட்சிபாசை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

அவர் இறுதி ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லேவை சந்திக்கிறார். இந்த போட்டியில் 4-வது வரிசையில் உள்ள ரூப்லேவ் அரை இறுதியில் 2-6, 6-3, 6-3 என்ற கணக்கில் முதல் நிலை வீரரான டேனில் மெட்வதேவை (ரஷியா) அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார்.

பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா)- ஜில்டெச்மேன் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள்.

Next Story