டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்! + "||" + US Open Tennis Starts Today!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்!
புதிய சாதனையை படைக்கும் உத்வேகத்துடன் ஜோகோவிச் தயாராகி வருகிறார்.
நியூயார்க், 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற சாதனையை படைக்கும் உத்வேகத்துடன் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் தயாராகியுள்ளார்.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்த ஆண்டில் ஏற்கனவே 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் வாகை சூடிய ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் இங்கு அவர் பட்டம் வென்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்துவார். தற்போது ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்), ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் சமநிலையில் உள்ளனர். மற்ற இருவரும் காயத்தால் இந்த முறை அமெரிக்க ஓபனில் ஆடவில்லை. அத்துடன் 1969-ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு வீரரும் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாமும் வென்றதில்லை. அந்த அரிய சாதனையை படைக்கும் வாய்ப்பும் ஜோகோவிச்சுக்கு உருவாகியுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கத்தை நழுவ விட்ட ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் அதற்கு பரிகாரம் தேடும் முனைப்புடன் உள்ளார். முதல் சுற்றில் அவர் தகுதி நிலை வீரர் டென்மார்க்கின் ஹோல்ஜர் நோட்ஸ்கோ ருனேவை எதிர்கொள்கிறார்.

ஒலிம்பிக் சாம்பியனும், சமீபத்தில் சின்சினாட்டி ஓபனை வென்றவருமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), 2-ம் நிலை வீரர் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் ஜோகோவிச்சுக்கு கடும் சோதனையாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான மூத்த வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் காயத்தால் ஒதுங்கி விட்டார். இதில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்), அரினா சபலென்கா ( பெலாரஸ்), ஸ்வியாடெக் (போலந்து), ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து), பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா), சிமோனா ஹாலெப் (ருமேனியா) , பிளிஸ்கோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் வெற்றி வாய்ப்பில் முன்னணியில் ஓடுகிறார்கள்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.422 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.18½ கோடியும், 2-வது இடம் பிடிப்போருக்கு ரூ.9¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வெல்லும் ஜோடிக்கு ரூ.4¾ கோடி கிடைக்கும்.

முதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட் எச்.டி. 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
2. 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
3. 9 மாவட்ட உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சியில் தலைவர் துணைத்தலைவர் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது.
4. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.