டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி 2-வது சுற்றுக்கு தகுதி + "||" + US Open Tennis: Djokovic, Ashley Party qualify for 2nd round

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி 2-வது சுற்றுக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி 2-வது சுற்றுக்கு தகுதி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், முதல் நிலை வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தகுதிநிலை வீரரான 18 வயது ஹோல்ஜர் நோட்ஸ்கோ ருனேவை (டென்மார்க்) எதிர்கொண்டார்.

2 மணி 15 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் முதல் செட்டை எளிதாக கைப்பற்றினாலும், 2-வது செட்டில் அவருக்கு கடும் சவால் காத்து இருந்தது. அந்த செட்டை டைபிரேக்கர் வரை போராடி வசப்படுத்தி ஹோல்ஜர் மிரட்டினார். ஆனால் அதன் பிறகு தசைப்பிடிப்பு காயத்தால் அவதிப்பட்ட அவரால் வேகமாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜோகோவிச் 6-1, 6-7 (5-7), 6-2, 6-1 என்ற செட் கணக்கில் ஹோல்ஜரை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 7-5, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் சாம்குயரியை விரட்டியடித்து தொடர்ந்து 12-வது வெற்றியை ருசித்தார்.

மற்ற ஆட்டங்களில் பெரேட்டினி (இத்தாலி), ஷபோவலோவ் (கனடா), நிஷிகோரி (ஜப்பான்), மெக்டொனால்டு (அமெரிக்கா), மான்பில்ஸ் (பிரான்ஸ்), அஸ்லன் கரட்சேவ் (ரஷியா) உள்ளிட்டோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் மங்கையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் ரஷியாவின் வெரா ஸ்னோரிவாவை வெளியேற்றி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 28 நிமிடம் தேவைப்பட்டது.

2019-ம் ஆண்டு சாம்பியனான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) 7-5, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் விக்டோரிஜா கோலுபிக்கை வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார். ஒலிம்பிக் சாம்பியன் பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் நெதர்லாந்தின் அரன்ட்ஜா ரஸ்சை தோற்கடித்தார்.

ஸ்வியாடெக் (போலந்து), கிவிடோவா (செக்குடியரசு), கோன்டாவெய்ட் (எஸ்தோனியா), பாலா படோசா (ஸ்பெயின்), ஜில் டீச்மான் (சுவிட்சர்லாந்து), பெட்ரா மார்டிச் (குரோஷியா) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகாவை (ஜப்பான்) எதிர்த்து ஆட இருந்த செர்பியாவின் ஒல்கா டேனிலோவிச் மருத்துவ காரணங்களுக்காக விலகியதால் களம் இறங்காமலேயே 2-வது சுற்றில் ஒசாகா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 3-வது சுற்றை எட்டினார்.

இதே போல் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கிறிஸ்டினா குகோவாவையும் (சுலோவக்கியா), முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஆன்ட்ரீயா பெட்கோவிச்சையும் (ஜெர்மனி) ஊதித்தள்ளி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். நேற்றைய தினம் மழையால் நிறைய ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி சுற்று மூலம் முன்னேறியவரான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு தகுதி
இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்ள உள்ளார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; மெட்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் மெட்விடேவ், சபலென்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.