டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + U.S. Open tennis | Novak Djokovic dispatches old rival Kei Nishikori to reach fourth round

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும், ஜப்பானைச் சேர்ந்த நிஷிகோரியும் மோதினார்கள்.
நியூயார்க், 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.  இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும், ஜப்பானைச் சேர்ந்த நிஷிகோரியும் மோதினார்கள்.

முதல் செட்டை 7-6 என நிஷிகோரி கைப்பற்றினாலும்,  இரண்டாவது செட்டை 6-3, மூன்றாவது செட்டை 6-3 , நான்காவது செட்டை 6-2 என முறையே கைப்பற்றி ஜோகோவிச் அசத்தினார்.  இதன்படி,   6-7, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்ற ஜோகோவிச் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.