அமெரிக்க ஓபன் டென்னிஸ்; மெட்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; மெட்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 11 Sep 2021 1:57 AM GMT (Updated: 2021-09-11T07:27:25+05:30)

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ், தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள கனடா வீரர் பெலிக்ஸ் அஜெர் அலியாசிசை எதிர்கொண்டார். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-4, 7-5, 6-2  என்ற கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

Next Story