டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + US Open: Novak Djokovic Beats Alexander Zverev To Reach Final, One Win Away From Calendar Grand Slam

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு தகுதி
இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்ள உள்ளார்.
நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று  அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில்  ஜோகோவிச் (செர்பியா) - ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினர்.  

மிகவும் பரபரப்பாக இந்தப் போட்டி நடைபெற்றது. தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கும் ஜோகோவிச்சுக்கு 4-ஆம் நிலை வீரரான ஸ்வரேவ் கடும் சவால் அளித்தார். 

எனினும், சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.  

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், 4-வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முனைப்பு காட்டி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி சுற்று மூலம் முன்னேறியவரான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; மெட்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் மெட்விடேவ், சபலென்கா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மெட்வதேவ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.