டென்னிஸ்

ஆசிய போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து மனிகா பத்ரா நீக்கம் + "||" + Manika Bhadra dropped from Indian table tennis team for Asian Games

ஆசிய போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து மனிகா பத்ரா நீக்கம்

ஆசிய போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து மனிகா பத்ரா நீக்கம்
ஆசிய போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து மனிகா பத்ரா நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி, 

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் அணிகள், ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பெண்கள் அணியில் உலக தரவரிசையில் 56-வது இடத்தில் இருக்கும் முன்னணி வீராங்கனை மனிகா பத்ராவுக்கு இடம் கிடைக்கவில்லை. சோனிபட்டில் நடந்த தேசிய பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாததால் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியின் போது சக வீராங்கனைக்காக தனது ஆட்டத்தை தாரைவார்க்கும்படி தேசிய பயிற்சியாளர் சவும்யாதீப் ராய் கட்டளையிட்டார் என்று மனிகா பத்ரா சமீபத்தில் குற்றம்சாட்டியதும், அது குறித்து கமிட்டி அமைத்து விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆண்கள் அணியில் சரத்கமல், சத்யன், ஹர்மீத் தேசாய், மனவ் தக்கர், சனில் ஷெட்டி ஆகியோரும், பெண்கள் அணியில் சுதிர்தா முகர்ஜி, ஸ்ரீஜா அகுலா, அஹிகா முகர்ஜி, அர்ச்சனா காமத் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.