டென்னிஸ்

பயிற்சியாளரை விட்டுப் பிரிவதாக அறிவித்த சிமோனா ஹாலெப் + "||" + Simona Halep announces split up with coach

பயிற்சியாளரை விட்டுப் பிரிவதாக அறிவித்த சிமோனா ஹாலெப்

பயிற்சியாளரை விட்டுப் பிரிவதாக அறிவித்த சிமோனா ஹாலெப்
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப், தனது பயிற்சியாளரை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளார்.
புச்சாரெஸ்ட்,

ருமேனியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப் தனது பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேரன் காஹில்லை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘காஹில் உடனான 6 ஆண்டு கால பயிற்சி காலம் அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றுவதை முடிவுக்கு கொண்டு வர இதுவே சரியான நேரம் என்று கருதுகிறேன். என்னை சிறந்த டென்னிஸ் வீராங்கனையாக உருவாக்கிய அவருக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார். 

டேரன் காஹிலின் பயிற்சியின் கீழ் தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை (2018-ம் ஆண்டில் பிரெஞ்ச் ஓபன்) கைப்பற்றிய 29 வயதான ஹாலெப் டென்னிசில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார். அண்மையில் இவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். கடந்த வாரம் மாசிடோனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் டோனி லூருக் என்பவரை சிமோனா ஹாலெப் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி பயிற்சியாளர் பான்டோவிச் தகவல்
சென்னையின் எப்.சி. அணிக்கு 26-ந்தேதி முதல் பயிற்சி பயிற்சியாளர் பான்டோவிச் தகவல்.
2. சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்: தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை விளையாட்டு பயிற்சியாளர் மீது புகார்
சென்னையில் தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விளையாட்டு பயிற்சியாளர் மீது பரபரப்பு புகார் கூறப்படுகிறது.