டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:மீண்டும் கோப்பையை முத்தமிடுவாரா வீராங்கனை எம்மா ராடுகனு? + "||" + Emma raducanu to be back in the court at Indian wells 2021

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:மீண்டும் கோப்பையை முத்தமிடுவாரா வீராங்கனை எம்மா ராடுகனு?

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்:மீண்டும் கோப்பையை முத்தமிடுவாரா வீராங்கனை எம்மா ராடுகனு?
இந்த ஆண்டு அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற எம்மா ராடுகனு இந்த தொடரிலும் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலிபோர்னியா

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடர் வருடாந்திர டென்னிஸ் போட்டியாகும்.இது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் கார்டனில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.இந்த தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி முடிவடைகிறது.

ஆண்கள் பிரிவில் பல முன்னணி வீரர்கள் இந்த ஆண்டு இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்தனர். அதனால் இந்த ஆண்டு ஆண்கள் பிரிவில் ஒரு புதிய சாம்பியன் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் பெண்கள் பிரிவிலும் முன்னணி வீராங்கனைகள் ஆஷ்லே பார்டி மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. அதனால் இந்த ஆண்டு அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற எம்மா ராடுகனு இந்த தொடரிலும் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

18 வயதே ஆன எம்மா ராடுகனு கனடாவில் பிறந்தவர் .ஆனால் சிறு வயது முதலே பிரிட்டிஷ் நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார் . இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் எம்மா ராடுகனுவின் முதல் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கிரெம்லின் கோப்பை டென்னிஸ் :எம்மா ராடுகனு விலகல்
வரும் 18 ஆம் தேதி மாஸ்கோவில் தொடங்க இருந்த கிரெம்லின் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து எம்மா ராடுகனு விலகியுள்ளார்.
2. சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் தனது டென்னிஸ் பேட்டை சிறுவனிடம் வழங்கிய ஜோகோவிச்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
3. பிரஞ்சு ஓபன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் பார்போரா கிரெஜ்சிகோவா
பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் வெற்றிபெற்று பார்போரா கிரெஜ்சிகோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
4. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் புதிய சாதனையை நோக்கி நடால்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது.