டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்கமாட்டேன் : ஆண்டி முர்ரே + "||" + Britain's Andy Murray says he will not play Davis Cup

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்கமாட்டேன் : ஆண்டி முர்ரே

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்கமாட்டேன் : ஆண்டி முர்ரே
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடருக்கு தயாராகும் விதமாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்கமாட்டேன் என ஆண்டி முர்ரே தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் 

அடுத்த மாதம் 25 ஆம் தேதி தொடங்க இருக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்கமாட்டேன் என ஆண்டி முர்ரே தெரிவித்துள்ளார். 34 வயதாகும்  ஆண்டி முர்ரே பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள இவர் முன்னாள் நம்பர் 1 வீரர் ஆவார்.

அடுத்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்  போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்கமாட்டேன் என ஆண்டி முர்ரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

டேவிஸ் கோப்பை ,ஆஸ்திரேலியன் ஓபன் என அடுத்தடுத்து இரு பெரிய தொடர்கள் நடைபெற இருக்கின்றன.எனவே ஒரு தொடரில் மட்டும் முழுவதுமாக கவனம் செலுத்த விரும்புகிறேன். எனது உடலுக்கு சிறிது  ஓய்வளிக்க விரும்புகிறேன்.அதன் பிறகு ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் முழு ஈடுபாட்டுடன் களம் இறங்குவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.