டென்னிஸ்

கிரெம்லின் கோப்பை டென்னிஸ் :எம்மா ராடுகனு விலகல் + "||" + Emma Raducanu withdraws from Kremlin Cup

கிரெம்லின் கோப்பை டென்னிஸ் :எம்மா ராடுகனு விலகல்

கிரெம்லின் கோப்பை டென்னிஸ் :எம்மா ராடுகனு விலகல்
வரும் 18 ஆம் தேதி மாஸ்கோவில் தொடங்க இருந்த கிரெம்லின் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து எம்மா ராடுகனு விலகியுள்ளார்.
மாஸ்கோ 

இந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ராடுகனு.18 வயதே ஆன எம்மா ராடுகனு கனடாவில் பிறந்தவர் .ஆனால் சிறு வயது முதலே பிரிட்டன்  நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார்.

தகுதி சுற்றின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற  இவர் அந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டியில் பட்டம் வென்றார்.

இந்த நிலையில் வரும் 18 ஆம் தேதி மாஸ்கோவில் தொடங்க  இருந்த கிரெம்லின் கோப்பை டென்னிஸ் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார். 

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

துரதிருஷ்டவசமாக எனது போட்டி அட்டவணையில் நான்  சில மாற்றங்கள்  செய்யவேண்டியுள்ளது.இந்த ஆண்டு மாஸ்கோவில் நடைபெறும்  கிரெம்லின் கோப்பை தொடரில் நான் பங்கேற்கமாட்டேன். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெறும் தொடரில் ரஷ்ய ரசிகர்கள் முன் விளையாடுவேன் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றிலே எம்மா ராடுகனு தோல்வி அடைந்து வெளியேறிருந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.
2. டென்னிஸ் விளையாட்டுக்கு முழுக்கு போட தயாராகிறாரா ரோஜர் பெடரர்!
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அவருடைய பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
3. இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட விருதுகள் ஊக்குவிக்கும் : மனம் திறந்த டென்னிஸ் வீராங்கனை
2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் அங்கீதா ரெய்னா
4. உலக பெண்கள் டென்னிஸ் போட்டி: இன்று தொடங்குகிறது
‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
5. டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் :சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பட்டம் வென்றார் அனெட் கொன்டாவீட்
இந்த வருடத்தில் மட்டும் அனெட் கொன்டாவீட் வெல்லும் 4 வது டென்னிஸ் பட்டம் இதுவாகும்