டென்னிஸ்

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் :சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பட்டம் வென்றார் அனெட் கொன்டாவீட் + "||" + Anett Kontaveit beats Simona Halep to win Transylvania Open

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் :சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பட்டம் வென்றார் அனெட் கொன்டாவீட்

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் :சிமோனா ஹாலெப்பை  வீழ்த்தி பட்டம் வென்றார் அனெட் கொன்டாவீட்
இந்த வருடத்தில் மட்டும் அனெட் கொன்டாவீட் வெல்லும் 4 வது டென்னிஸ் பட்டம் இதுவாகும்
ரோமானியா

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ்  தொடரின் இறுதி போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார் எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவீட்.

டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடர் ரோமானியாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. இதன் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதல் நிலை வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹாலெப் எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவீட் பலப்பரீட்சை நடத்தினர்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அனெட் கொன்டாவீட் சிமோனா ஹாலெபிற்கு கடும் சவால் அளித்தார். தொடர் முழுவதும் மிக சிறப்பாக விளையாடிய அனெட் இறுதி போட்டியிலும் 6-2 6-3 என்ற நேர் செட் கணக்கில் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பட்டம் வென்றார்.

இந்த வருடத்தில் மட்டும் அனெட் கொன்டாவீட் வெல்லும் 4 வது டென்னிஸ் பட்டம் இதுவாகும்.மேலும் அனெட் தான் கடைசியாக விளையாடிய 28 போட்டிகளில் 26 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது 


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ், ஹாலெப் 4-வது சுற்றுக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ், சிமோனா ஹாலெப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பியான்கா விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து கனடா வீராங்கனை பியான்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.
4. டென்னிஸ் விளையாட்டுக்கு முழுக்கு போட தயாராகிறாரா ரோஜர் பெடரர்!
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அவருடைய பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
5. இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட விருதுகள் ஊக்குவிக்கும் : மனம் திறந்த டென்னிஸ் வீராங்கனை
2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் அங்கீதா ரெய்னா