டென்னிஸ்

உலக பெண்கள் டென்னிஸ் போட்டி: இன்று தொடங்குகிறது + "||" + World Women's Tennis Tournament: Starts today

உலக பெண்கள் டென்னிஸ் போட்டி: இன்று தொடங்குகிறது

உலக பெண்கள் டென்னிஸ் போட்டி: இன்று தொடங்குகிறது
‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
குவாடலஜரா, 

‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் இன்று முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.

மொத்தம் ரூ.37 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் இருந்து உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகி விட்டார். அவர் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் பொருட்டும், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளார். இதேபோல் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபிர் அடுத்த சீசனுக்கு தயாராகுவதற்கு வசதியாக ஒதுங்கிவிட்டார். அவர்களுக்கு பதிலாக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), மற்றும் 10-வது இடத்தில் உள்ள பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரிவுகளுக்கு மெக்சிகோ நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இதில் ‘சீச்சன் இட்சா’ பிரிவில் சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும், ‘தியோதி அகான்’ பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

பிளிஸ்கோவா-முகுருஜா மோதல்

இதில் ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

தொடக்க நாளில் நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் கிரெஜ்சிகோவா-கோன்டாவெய்ட், கரோலினா பிளிஸ்கோவா-கார்பின் முகுருகா ஆகியோர் மோதுகிறார்கள்.

பெண்கள் இரட்டையர் பிரிவிலும் போட்டி நடைபெறுகிறது. இதில் ஷூகோ அயமா-எனா ஷிபஹரா (ஜப்பான்), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா)-ஜாங் ஷூய் (சீனா) உள்பட 8 இணைகள் கலந்து கொள்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சுரங்கப்பாதை அமைக்க குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு ரெயில்வே அதிகாரிகள் காரை சிறை பிடித்த பெண்கள்
சுரங்கப்பாதை அமைக்க குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ரெயில்வே அதிகாரிகள் வந்த கார்களை சிறைபிடித்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
2. வீடு வாடகைக்கு எடுத்து சூதாட்டம்; 11 பெண்கள் கைது
சென்னையில் வீடு வாடைக்கு எடுத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பியான்கா விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து கனடா வீராங்கனை பியான்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.
4. நாடாளுமன்றத்தில் பணியாற்றும் மூன்றில் 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை- எங்கு தெரியுமா...?
பிரிட்டானி ஹிக்கின்ஸ் மற்றவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டுதலாக இருந்தார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.