டென்னிஸ்

டென்னிஸ் விளையாட்டுக்கு முழுக்கு போட தயாராகிறாரா ரோஜர் பெடரர்! + "||" + roger federer thinking of retirement here s what his coach has to say

டென்னிஸ் விளையாட்டுக்கு முழுக்கு போட தயாராகிறாரா ரோஜர் பெடரர்!

டென்னிஸ் விளையாட்டுக்கு முழுக்கு போட தயாராகிறாரா ரோஜர் பெடரர்!
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அவருடைய பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி,

சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார். அதன்பின், அவர் எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை.

2020ம் ஆண்டில் தொடர்ச்சியாக பிப்ரவரி மற்றும் மே மாதங்களில், ரோஜர் பெடரர் காயம் காரணமாக வலது முழங்கால் அறுவை சிகிச்சையை  மேற்கொண்டார். அந்த அறுவை சிகிச்சைகளுக்கு பின் அவர் 5 டென்னிஸ் தொடர்களில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் காயத்தில் இருந்து  மெல்ல மீண்டு வருவதால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது சந்தேகமே என அவருடைய பயிற்சியாளர் இவான் ஜுபிசிக் தெரிவித்துள்ளார்.தற்போது அவர் 40 வயதை கடந்துள்ளதால் காயத்தில் இருந்து மீண்டு வர கூடுதல் காலம் தேவைப்படும். 100 சதவீதம் முழு உடற்தகுதி அடைந்தபின்னர் தான் அவர் களம் காணுவார் என்றும்,  தற்போதைக்கு ஓய்வு பெறும் முடிவில் அவர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விளக்கத்தின் மூலம், ‘ரோஜர் பெடரர் மீண்டும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வார்’ என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். 

20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான  பெடரர், கடந்த மாதம் வெளியிடப்பட்ட டென்னிஸ் தரவரிசை பட்டியலில்  டாப்-10 வீரர்கள் பட்டியலில் இருந்து பின்னடைவை சந்தித்தார். 2017ம் ஆண்டு  ஜனவரி மாதத்துக்கு பின் டாப்-10ல் இருந்து அவர் பின்னடைவை சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சிட்சிபாஸ், ஹாலெப் 4-வது சுற்றுக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ், சிமோனா ஹாலெப் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பியான்கா விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து கனடா வீராங்கனை பியான்கா விலகுவதாக அறிவித்துள்ளார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.
4. இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட விருதுகள் ஊக்குவிக்கும் : மனம் திறந்த டென்னிஸ் வீராங்கனை
2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் அங்கீதா ரெய்னா
5. உலக பெண்கள் டென்னிஸ் போட்டி: இன்று தொடங்குகிறது
‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.