டென்னிஸ்

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Daniil Medvedev strolls past Casper Ruud to make Turin final

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு ரஷியாவின் டேனில் மெட்விடேவ் தகுதி பெற்றுள்ளார்.
துரின், 

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. தரவரிசையில் டாப்-8 இடங்களில் இருக்கும் வீரர்கள் 'ரெட்' மற்றும் 'கிரீன்' என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அரைஇறுதிக்கான லீக் ஆட்டத்தில் விளையாடினர். பின்னர் ‘ரவுண்ட்-ராபின்’ முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.  

இந்நிலையில் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெட்விடேவ் 6-4. 6-2 என்ற நேர் செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை (நார்வே) வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டினார்.