டென்னிஸ்

உலக ஆண்கள் டென்னிஸ்: மெட்விடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ் + "||" + World Men's Tennis: Zverev defeats Medvedev to win the title

உலக ஆண்கள் டென்னிஸ்: மெட்விடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்

உலக ஆண்கள் டென்னிஸ்: மெட்விடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்
உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று இத்தாலியின் துரின் நகரில் நடந்தது.
துரின்,

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெட்விடேவும்   ஒலிம்பிக் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதினர்.

இந்த ஆட்டத்தில், ஸ்வெரேவ், 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மெட்விடேவை வீழ்த்தி வெற்றியை ருசித்தார். இது ஏடிபி. இறுதிசுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்வெரேவ் பெறும் இரண்டாவது டைட்டில் ஆகும்.