மாநில டேபிள் டென்னிஸ்: ஆனந்தராஜ், ஹர்ஷவர்தினி சாம்பியன்


மாநில டேபிள் டென்னிஸ்: ஆனந்தராஜ், ஹர்ஷவர்தினி சாம்பியன்
x
தினத்தந்தி 22 Nov 2021 10:40 PM GMT (Updated: 2021-11-23T04:10:53+05:30)

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆனந்தராஜ், ஹர்ஷவர்தினி சாம்பியன் பட்டம் வென்றனர்.

சென்னை, 

மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடந்தன. இதில் 500-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர். அவர்கள் 8 பிரிவுகளில் விளையாடினர். சீனியர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஆனந்தராஜ் (தெற்கு ரெயில்வே) 6-11, 11-9, 12-10, 11-8, 10-12, 12-10 என்ற செட் கணக்கில் அபினயை (ஐ.டி.டி.சி அணி) தோற்கடித்து பட்டத்தை வென்றார்.

இதன் பெண்கள் பிரிவில் ஹர்ஷவர்தினி (ரிசர்வ் வங்கி அணி) 11-9, 11-9, 11-7, 8-11, 14-12 என்ற செட் கணக்கில் ஷர்மிதாவை (டி.டி.டி.ஏ.) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். பிரயேஷ் (17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவு), ஹன்சினி (13 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவு) இரட்டை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.


Next Story