டென்னிஸ்

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: பட்டம் வென்றார் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்...! + "||" + Ramkumar Ramanathan wins maiden singles title on ATP Challenger Tour in Manama

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: பட்டம் வென்றார் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்...!

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: பட்டம் வென்றார் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்...!
ஏடிபி சேலஞ்சர் இறுதிப் போட்டிகளில் முதல்முறையாக ஒற்றையர் பட்டத்தை ராம்குமார் ராமநாதன் வென்றுள்ளார்
மனாமா ,

ஏடிபி மனாமா சேலஞ்சர் டென்னிஸ் தொடர்  பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் கடந்த வாரம் தொடங்கியது. இதன் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் , ரஷ்யாவின் கார்லோவ்ஸ்கியை எதிர்கொண்டார்.

போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராம்குமார் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார் . இரண்டாவது சேட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய ராம்குமார் , ரஷ்யாவின் கார்லோவ்ஸ்கியை நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். 

27 வயதான ராம்குமார், இதற்கு முன்பு ஆறு ஏடிபி சேலஞ்சர் இறுதிப் போட்டிகளில் பங்கேற்று தோல்வி அடைந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியின் மூலம் தனது முதல் ஏடிபி சேலஞ்சர் நிலை ஒற்றையர் பட்டத்தை ராம்குமார் ராமநாதன் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே, எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வியை தழுவினர்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து செக் குடியரசின் கரோலின் முச்சோவா விலகுவதாக அறிவித்துள்ளார்.
3. பிரிட்டிஷ் விளையாட்டு விருதுகள்: இந்த ஆண்டின் சிறந்த வீராங்கனையாக எம்மா ராடுகானு தேர்வு
19 வயதான ராடுகானு, அமெரிக்க ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் டென்னிஸ் உலகையே திகைக்க வைத்தார்.
4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலியை வீழ்த்தியது குரேஷியா
குரேஷிய அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் செர்பியா அல்லது கசகஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.
5. காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... சீனாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை!
சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.