டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலியை வீழ்த்தியது குரேஷியா


டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இத்தாலியை வீழ்த்தியது குரேஷியா
x
தினத்தந்தி 30 Nov 2021 9:36 AM GMT (Updated: 30 Nov 2021 9:36 AM GMT)

குரேஷிய அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் செர்பியா அல்லது கசகஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

டுரின்(இத்தாலி),

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் நேற்று நடைபெற்ற  காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி -குரேஷியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில், இத்தாலி அணிக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது குரேஷியா. 

குரேஷியா அணியின் மேட் பேவிக் மற்றும் நிகோலா மெக்டிக் இணை இத்தாலி அணியின் பேபியோ போக்னினி மற்றும் ஜன்னிக் சின்னர் இணையை 6-3, 6-4 என்ற செட் கணக்கில்  தோற்கடித்தது.

இந்த வெற்றியின் மூலம், குரேஷிய அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குரேஷிய அணி தனது அரை இறுதி ஆட்டத்தில் செர்பியா அல்லது கசகஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த முறை கோப்பையை  கைப்பற்றினால் மூன்றாவது முறையாக கோப்பையை வென்ற பெருமை அந்த அணிக்கு கிடைக்கும்.  கடைசியாக 2018ம் ஆண்டு குரேஷிய அணி டேவிஸ் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமைஅன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பிரிட்டன் அணி செக் குடியரசு அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இந்த டேவிஸ் கோப்பை தொடரில் 28 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இம்முறை அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறி உள்ளது.


Next Story