அடிலெய்ட் டென்னிஸ்: 100ம் நிலை வீராங்கனையிடம் தோல்வியடைந்த முன்னணி வீராங்கனை!


அடிலெய்ட் டென்னிஸ்: 100ம் நிலை வீராங்கனையிடம் தோல்வியடைந்த முன்னணி வீராங்கனை!
x
தினத்தந்தி 5 Jan 2022 8:29 AM GMT (Updated: 2022-01-05T13:59:13+05:30)

உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான சபலென்கா 100-வது இடத்தில் இருக்கும் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

அடிலெய்ட்,

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் ‘அடிலெய்ட் 2022 இண்டர்நேஷனல்’ டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் தொடரின் முன்னோட்டமாக இந்த டென்னிஸ் தொடர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான சபலென்கா, 100-வது இடத்தில் இருக்கும் வீராங்கனையிடம் தோல்வியடைந்துள்ளது டென்னிஸ் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சோல்வேனியா நாட்டின் காஜா ஜுவான் உலக பெண்கள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 100வது இடம் வகிக்கிறார். அவர் பெலாரஸ் நாட்டின் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்காவை எதிர்த்து களம் கண்டார். இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சபலென்காவை விட காஜா ஜுவான் முன்னிலை பெற்று வந்தார். போட்டியின் இறுதியில் அவர் 7-6 (8/6), 6-1 என்ற செட்களில் சபலென்காவை வீழ்த்தினார். 

இன்று நடைபெறும் ஆட்டங்களில் உலகின் நம்பர் ஒன் வீரங்கனை ஆஷ் பார்டி அமெரிக்காவின் கோகோ காப் பலப்பரிட்சை நடத்துகின்றனர். மற்றொரு போட்டியில் கிரீஸ் நாட்டின் மரியா சகாரி - ஷெல்பி ரோகெர்ஸை எதிர்கொள்கிறார்.

Next Story