மெல்போனில், ஜோகோவிச்சுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆதரவு குரல் எழுப்பிய செர்பியா மக்கள் + "||" + The Serbian people raised their voices in support of Djokovic carrying a candle to Melbourne
மெல்போனில், ஜோகோவிச்சுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியபடி ஆதரவு குரல் எழுப்பிய செர்பியா மக்கள்
செர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள், மெல்போர்னில் ஜோகோவிச் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலுக்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
மெல்போர்ன்,
உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்ற சாதனையாளருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மருத்துவ விதிவிலக்குக்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படைஅதிகாரிகள் அவரது விசாவை தடாலடியாக ரத்து செய்து, நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுத்தனர்.
முதலில், மருத்துவச்சான்றிதழ் கொண்டுவருவதிலிருந்து அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்ட நிலையில், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படை தன்மையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் பல மணி நேரம் அவர் விமான நிலையத்திலேயே பரிதவித்தார். பிறகு இதே போல் குடியுரிமை சோதனையில் சிக்குவோர் தங்கவைக்கப்படும் ஓட்டலுக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வால் அதிருப்தி அடைந்த செர்பியா நாட்டைச் சேர்ந்தவர்கள், மெல்போர்னில் ஜோகோவிச் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலுக்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தியபடி அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.