டென்னிஸ்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றது இந்திய ஜோடி ..! + "||" + Adelaide International Tennis - Indian pair wins doubles title ..!

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றது இந்திய ஜோடி ..!

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் - இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றது இந்திய ஜோடி ..!
இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-ராம்குமார் கூட்டணி, இவான் டோடிச் (குரோஷியா)-மார்செலோ மிலோ (பிரேசில்) இணையை எதிர்த்து விளையாடியது.
அடிலெய்டு, 

சர்வதேச டென்னிஸ் போட்டி  அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போ பண்ணா-ராம்குமார் ஜோடி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் டாமிஸ்லாவ் பிர்கிச் (போஸ்னியா)-சான்டியாகோ கோன்ஸலேஸ் (மெக்சிகோ) இணையை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

இந்நிலையில்  இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-ராம்குமார் கூட்டணி, இவான் டோடிச் (குரோஷியா)-மார்செலோ மிலோ (பிரேசில்) இணையை எதிர்த்து விளையாடியது.

இதில் 7-6 , 6-1 என்ற கணக்கில் போபண்ணா-ராம்குமார் ராமநாதன் ஜோடி வெற்றி பெற்று பட்டம் வென்றது 

ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் நடந்த இப்போட்டியில்,  முதல் செட்டில் வெற்றிக்கு கடுமையாக போராடிய  இந்தியாவின்   போபண்ணா-ராம்குமார் ராமநாதன்  ஜோடி இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்தியதால் வெற்றி சுலபமானது. .