டென்னிஸ்

ஜோகோவிச் விசா ரத்து விவகாரம்: ஆஸ்திரேலிய நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு + "||" + Novak Djokovic Wins Case, Australia Judge Orders Release, Could Yet Be Deported

ஜோகோவிச் விசா ரத்து விவகாரம்: ஆஸ்திரேலிய நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஜோகோவிச் விசா ரத்து விவகாரம்: ஆஸ்திரேலிய நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஆஸ்திரேலிய நீதிமன்றம். தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மெல்போர்ன்,

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க மெல்போர்ன் சென்ற உலகின் ‘நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை ரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

 தனக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்துள்ளது.  

கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்றி வரும் ஆஸ்திரேலிய அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அளித்த பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.  ஆஸ்திரேலிய நீதிமன்றம். தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

எனினும்,  குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி விசாவை ரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கலந்து கொள்ள ஜோகோவிச் திட்டம்
துபாயில் நடக்கும் ஏ.டி.பி. சர்வதேச டென்னிசில் கலந்து கொள்ள நோவக் ஜோகோவிச் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. டோங்காவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆஸ்திரேலியா
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவை சந்தித்த டோங்கா நாட்டுக்கு ஆஸ்திரேலியா நிவாரண பொருட்கள் வழங்கியது.
3. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலும் ஜோகோவிச் பங்கேற்பதில் சிக்கல்
தடுப்பூசி செலுத்தாத காரணத்தினால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.
4. சட்ட போராட்டத்தில் தோல்வி; ஆஸி. ஓபனில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்று, சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் வாய்ப்பை ஜோகோவிச் இழந்துள்ளார்.
5. ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பாரா? பெடரல் கோர்ட்டு இன்று முடிவு
ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பாரா? பெடரல் கோர்ட்டு இன்று முடிவு