ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெளியேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி வெளியேற்றம்
x
தினத்தந்தி 25 Jan 2022 11:48 PM GMT (Updated: 2022-01-26T05:18:54+05:30)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் சானியா ஜோடி தோற்று வெளியேறியது.

மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடி 4-6, 6-7 (5-7) என்ற நேர்செட்டில் ‘வைல்டு கார்டு’ மூலம் தகுதி கண்ட ஆஸ்திரேலியாவின் ஜெய்மீ போர்லிஸ்-ஜாசன் குப்லெர் இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது. 

இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. அத்துடன் இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா கால்இறுதியில் சந்தித்த தோல்வியுடன் ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விடைபெற்றார்.


Next Story