போட்டியின் நடுவே காயத்தால் விலகிய வீரர்...வெற்றி பெற்ற வினோதம்...!


போட்டியின் நடுவே காயத்தால் விலகிய வீரர்...வெற்றி பெற்ற வினோதம்...!
x
தினத்தந்தி 29 Jan 2022 11:30 AM GMT (Updated: 29 Jan 2022 11:30 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் புரூனோ குழுஹாரா.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்  மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த டென்னிஸ் தொடரின் ஜூனியர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் புரூனோ குழுஹாரா சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் புரூனோ குழுஹாரா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

போட்டியின் நடுவே ஜாகுப் மென்சிக்கிற்கு தசைபிடிப்பு ஏற்பட்டு விளையாட இயலாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை சக்கர நாற்காலியில் ஏற்றி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

பின்னர் போட்டியின் வெற்றியாளராக புரூனோ குழுஹாரா அறிவிக்கப்பட்டார்.

ஆனால், இந்த வெற்றி குறித்து அவர் கூறியதாவது, “இது ஒரு துரதிர்ஷ்டவசமான முறையில் கிடைத்த வெற்றி. ஜாகுப்  விரைவில் குணமாக வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டார்.

பெண்கள் ஜூனியர் பிரிவில் குரேஷியாவின் பெட்ரா மார்னிக்கோ முதன்முறையாக பட்டத்தை கைப்பற்றினார். அவர் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் சோபியா காஸ்டோலாசை வீழ்த்தினார்.

Next Story