மியாமி டென்னிஸ்: நவோமி ஒசாகா கால்இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


மியாமி டென்னிஸ்: நவோமி ஒசாகா கால்இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 30 March 2022 1:52 AM IST (Updated: 30 March 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதி சுற்றுக்கு நவோமி ஒசாகா முன்னேறினார்.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கியை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-3, 6-1 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் கோரி காப்பை விரட்டியடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினஸ்சை வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார்.

Next Story