மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிட்சிபாசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஸ்வெரெவ்..!


image courtesy: Madrid open twitter via ANI
x
image courtesy: Madrid open twitter via ANI
தினத்தந்தி 8 May 2022 5:58 PM GMT (Updated: 8 May 2022 5:58 PM GMT)

இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், சிட்சிபாஸ் உடன் மோதினார்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், கிரேக்க நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். தொடர்ந்து இன்று நடைபெறும் இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதுகிறார்.

Next Story