மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன்..!
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கார்லஸ் அல்காரஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர்.
மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வந்தது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கார்லஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியனான ஸ்வெரெவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
Related Tags :
Next Story