இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: ஸ்வெரெவ், சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்..!


image courtesy: Internazionali Bnl twitter via ANI
x
image courtesy: Internazionali Bnl twitter via ANI
தினத்தந்தி 12 May 2022 4:45 PM GMT (Updated: 12 May 2022 4:45 PM GMT)

இன்று நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

இத்தாலி,

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.

இந்த போட்டியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி கால்இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு 3-வது சுற்று போட்டி ஒன்றில், கிரேக்க நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ரஷியாவின் கரேன் கச்சனோவ் உடன் மோதினார். இந்த போட்டியில் 4-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்.

Next Story