இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் இகா ஸ்வியாடெக், சபலெங்கா வெற்றி..!


image courtesy: Internazionali Bnl twitter
x
image courtesy: Internazionali Bnl twitter
தினத்தந்தி 13 May 2022 4:43 PM GMT (Updated: 2022-05-13T22:13:57+05:30)

இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் இகா ஸ்வியாடெக் பியான்கா ஆண்ட்ரீஸ்குடன் மோதினார்.

இத்தாலி,

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் கனடா நாட்டைச் சேர்ந்த பியான்கா ஆண்ட்ரீஸ்குடன் மோதினார். 

இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 7-6 (7-2), 6-0 என்ற செட் கணக்கில் பியான்காவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். 

மேலும் மற்றொரு கால்இறுதி போட்டியில் பெலாரசியன் அரினா சபலெங்கா, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவாவை வீழ்த்தி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறினார். 

நாளை நடைபெறவுள்ள அரைஇறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக் மற்றும் அரினா சபலெங்கா மோத உள்ளனர்.

Next Story