பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் பாகுன்டோ பாக்னிசை (அர்ஜென்டினா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இளம் வீரர் ஹோல்ஜர் ருன் (டென்மார்க்) 6-3, 6-1, 7-6 (4) என்ற நேர் செட்டில் தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் டெனிஸ் ஷபோவலேவுக்கு (கனடா) அதிர்ச்சி அளித்தார்.

பெண்கள் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 6-1, 6-4 என்ற நேர் செட்டில் லுசியா புரோன்ஸிட்டியை (இத்தாலி) விரட்டினார்.

ஆண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- மேட்வி மிட்டெல்கூப் (நெதர்லாந்து) ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்டில் பிரான்சின் வயேன்பர்க்- லுகா வான் ஆஸ்சி இணையை வீழ்த்தியது.


Next Story