விம்பிள்டன் டென்னிஸ்: தொடக்க சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி


விம்பிள்டன் டென்னிஸ்: தொடக்க சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி
x

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் தொடக்க சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பழம்பெருமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சூன்வோகிவோனை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் கேஸ்பர் ரூட் (நார்வே), கேமரூன் நோரி (இங்கிலாந்து), டாமி பால் (அமெரிக்கா), குயான்டின் ஹாலி (பிரான்ஸ்), ஜாமி முனார் (ஸ்பெயின்), பிரான்சிஸ் டியாயோ (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சுவீடனின் மிர்ஜாம் பிஜோர்க்லுன்டை விரட்டியடித்தார். மற்ற ஆட்டங்களில் அன்ஹெலினா கலினினா (உக்ரைன்), லிசா சுரெங்கா (உக்ரைன்), அலிசன் ரிஸ்கி (அமெரிக்கா), அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோர் தங்களது முதல் தடையை வெற்றிகரமாக கடந்தனர். மழை குறுக்கீடு காரணமாக வெளிப்புற மைதானங்களில் நடக்க இருந்த போட்டிகள் பாதிக்கப்பட்டன.


Next Story