விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஒன்ஸ் ஜபீர், ரைபகினா இன்று பலப்பரீட்சை..!


விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஒன்ஸ் ஜபீர், ரைபகினா இன்று பலப்பரீட்சை..!
x

image courtesy: Wimbledon twitter

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஒன்ஸ் ஜபீர், எலினா ரைபகினாவுடன் மோதுகிறார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் சாம்பியன் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா பலப்பரீட்சையில் இறங்குகிறார்கள். இதில் யார் வெற்றி பெற்றாலும் அந்த நாடு வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும்.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story