உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: பிரனாய், அஸ்வினி மற்றும் சிக்கி ரெட்டி வெற்றி
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் பிரனாய், அஸ்வினி மற்றும் சிக்கி ரெட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
வெல்வா,
26-வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று பிரனாய் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி ரெட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
இதில் பிரனாய் மலேசியாவைச் சேர்ந்த வீர்ர் லியூ டேரனுடன் மோதினார். 42 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 21-7, 21-17 செட் கணக்கில் பிரனாய் வெற்றி பெற்றார். மேலும் சீனாவைச் சேர்ந்த லியு சுவான் மற்றும் சியு யூ டிங் அணியுடன் மோதிய அஸ்வினி மற்றும் சிக்கி 21-11, 9-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். இந்த ஆட்டம் 51 நிமிடங்கள் நடந்தது.
Related Tags :
Next Story